கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அடுத்த வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார தரப்பினரின் பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களிற்கு அமையவே இது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மூன்றாம் தவணைக்கான விடுமுறை 24ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.